Tuesday, 16 January 2018

இசை

இசை

கடவுளின் உள்ளத்தை கவர்ந்த தேன் மொழி
இறைவனிடம் பேச மந்திரம் தேவை இல்லை
இசை எனும் இனிய மொழி இறைவனை அடைய வழி!

இயற்கையின் ஒவ்வொரு அசைவிலும்  இசை உண்டு
காற்று  கலந்த எதிலுமே இசை கருப்பெறும்
இசையின் சுவாசம் இதயம் துடிக்கும் வரை

குழந்தையின் சிரிப்பு புன்னகை இசை
மங்கையரின் சிரிப்பு மன்மத இசை
ஆண்களின் சிரிப்பு வீர இசை
இசை மூலமே உணர்வுகளின் நிஜ பரிமாற்றம்

தனிமை நீக்கும் இசை உறவாக
துன்பத்தை நீக்கும் இசை துணையாக
வன்மத்தை நீக்கும் இசை வரமாக
இசை போதும் இங்கு அநாதைகள் யாருமில்லை

உலகை இணைக்கும் உறவு பாலமாய் இசை
உலக சமாதான தேசி கீதம் இசை
யாராலும் வெறுக்க முடியாத , பிரிக்க முடியாத
தாய் போல் அரவணைப்பு இசை


இசை இல்லா வாழ்க்கையில் இன்பம் கசக்கும்
இசை உள்ள வாழ்வில் துன்பமும் நிலை இல்லை
இசை ஒன்றே மனிதனை புனிதனாக்கும்
புனித இசையே பூமியை அழகாக்கும்

By Prasanth satkunanathan ( Heartbeat)


Thursday, 28 December 2017

விண்ணுக்கும் மண்ணுக்கும்


விண்ணுக்கும் மண்ணுக்கும்
பருவ கால மாற்றத்திற்காய் காதல் யாகம்
காலம் கனிந்தால் காதல் யோகம்
காலங்கள் உருண்டாலும் உடையாத காதல்!

மாறாத இளமை குறையாத மோகம்
இடை வெளி கூடினாலும் இறுக்கமான காதல்
இயற்கையின் படைப்பில் இணையற்ற காதல்!

விண்ணும் காதலனாக மின்னலாய் ஆயுத்தம்
இடி முழக்கம் இட்டு தன் வரவை அனுப்பி வைத்தான்
நேரமும் மோகமும் கூடி வர மழையென மாறினான்!

எழிலின் முழு உருவாய் மண்ணவள் காதலியாய்
இயற்கை தோழிகளுடன் எதிர் பார்த்து காத்திருந்தாள்!
விண்ணவன் வரவை தோகை மயில் தூது சொன்னது

வானமே கருமையாய் வானிலே கரு நிலா
இருளினை கூட்டியே இன்ப விழா ஆரம்பம்
மன்மத மழை அணைத்த  அன்பு கூடல்!

விண்ணும் மண்ணும் இட்ட முத்தத்தில் தான்
சந்தோசம் வித்திட்டது இயற்கை புன்னகைத்தது


விண்ணுக்கும் மண்ணுக்கும் சொந்தம் பூமியின் உயிர்கள்By Prasanth satkunanathan ( Heartbeat)

Sunday, 8 January 2017

காதல் வானிலை

காதல் வானிலை 

இறுக்கத்தில் இடை வெளி குறைய 
விழிகள் நெருங்கி மவுனிக்க 
இதயங்கள்  கட்டி அணைக்க  ஆசை 
நெருக்கத்தில் பருவ பாடம் ஆரம்பம் 
குளிருக்கு இறுக்கி, குளிர் காய தீ 
ஒரே நேரத்தில் குளிர் தீயாய் 
புதுவித வானிலை மாற்றம் #காதல்

BySprasanth

Wednesday, 20 July 2016

#காதல்_பாடம்

#காதல்_பாடம் 

மணிக்கணக்கில் பேசத்தேவையில்லை  
மணி பாராது மனம் விட்டு பேசு போதும்
உன் பேச்சில் உயிர் பெறும்  உணர்வுகள்  
என் உணர்வுகள் அறிந்த மொழி உன் பேச்சு 

கொஞ்சுவது காதலில் இன்ப சாதல் 
கெஞ்சுவது காதலில் பேரின்ப மோதல் 
சில நேர பிரிவு சொல்லும் காதல் பாடம் 
துடிப்பும் பின் இணைப்பும் காதலின் விளக்கம் 

இன்பம் மட்டுமே காதலின் இலக்கணம் அல்ல 
துன்பத்திலும் காதல் வாழும் தொடரும் என்பதே 
காதலில் போட்டி யார் காதல் பெரிதென்பதல்ல 
விட்டுக்கொடுக்காது விட்டு விலகாது இருப்பதே.

#BySprasanth 

Tuesday, 12 July 2016

#காதல்_விதி

 #காதல்_விதி வானின் நிலா வந்து உன்னை பார்க்கும் உன்னை பார்த்த பின் அதன் கர்வம் அடங்கும் உன் எழில் கண்டு நிலா கூறிய கவிதை நீ நடமாடும் தேயாத பூமி நிலா என்று உன் அழகிய கனவுகள் கலையாது கண் விழித்து காவல் காக்க ஆசை இன்னும் கொஞ்ச ஆசை அது உன் கனவெல்லாம் நானாக ஆசை உனக்காக மட்டும் பூக்கள் மலர ஆசை கூவும் குயில் கூட உனக்காக இசைக்க ஆசை இளமையும் இருளும் விலகாது இணைக்க இதயங்கள் இடம் மாறி துடிக்கும் இன்ப விழா அலை கடல் , முகில் மேகம் பிரிந்தாலும் ஓயாது சுழலும் பூமி ஓய மறந்தாலும் இணைந்த காதல் பிரியாது மறவாது வாழும் இயற்கை விதியை வெல்லும் காதல் விதி #BySprasanth‪கலைக்கோயில்‬

‪கலைக்கோயில்‬
குயிலும் , மயிலும் கூட 
ஆடலும் பாடலும் கற்ற விரும்பும் 
ரசிக்கும் கலைகளின் ராணி நீ 
கலைகள் அரங்கேறும் கலைக்கோயில்

உன் எழில் வர்ணிக்க இயலாது 
கற்பனைக்கும் மூச்சு வாங்கும் 
கவிதையில் உனை எழுத 
எழுத்துக்களும் ஏங்கி நிற்கும்

உன் பார்வை வீச்சில் உயிர் பூக்கும் 
உன் பார்வை விலகின் உயிர் தவிக்கும்
உனை இன்றி நான் வேண்ட வரம் இல்லை 
உனை நீங்கி நான் வாழ வாழ்க்கை இல்லை

Friday, 8 July 2016

காதலின் வெற்றி

#காதலின்_வெற்றி

தெரிந்து சில சமயம் தெரியாத பல சமயம் 
உனதழகை ரசிப்பதில் கலாப காதல் ரசிகன் 
உன் மனதை கொள்ளை கொண்டதில் பெருமை 
காதல் சட்டத்தில் ஆயுள் தண்டனை காதல்

வாடாத உன் புன்னகை வாட்டி வதைக்கிறது 
வேண்டி விரும்பும் காதல் காயங்கள் சுகமே 
காந்த பார்வையில் ஒட்டி கொண்ட இதயங்கள் 
பிரிக்க முடியாத ஈர்ப்பு இணையில்லா இணைப்பு

காதலின் வெற்றி துன்பத்திலும் இன்பம் 
காதல் கைகளில் துன்பங்கள் சுக தூக்கம் 
கண்ணீரை வர விடா ,வந்தாலும் ஏந்தி பிடிக்கும் 
காதல் இருக்கும் வரை கடவுளும் தேவை இல்லை


BySprasanth